ஸ்விட்ஸர்லாந்தில் இணைய தளத்தின் மூலமாக, பிங்க் நிற விளையாட்டுத் துப்பாக்கிகளை வாங்கிய அரசியல்வாதிக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. ஒரு உள்ளூர் பத்திரிகை அறிக்கையின் படி, அந்த பொம்மைத் துப்பாக்கிகளை அவர் வாங்கியது, நாட்டின் ஆயுதச் சட்டத்தை மீறும் செயலாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஸூரிச் நகருக்கு மேற்கே உள்ள புஹ்ஸ் நகரில் நகர்மன்ற உறுப்பினரான மார்க் ஜைஸ்லி தமது வீட்டுக் குழந்தைகளுக்கு பரிசளிப்பதற்காக, நீரை பாய்ச்சும் விலை மலிவான பொம்மைத் துப்பாக்கிகளை இணையதளத்தின் மூலம் வாங்கியதாகத் தெரிகிறது.
பொம்மைத் துப்பாக்கிகள் பிங்க் நிறத்தில் இருந்தாலும் கூட அவை நிஜ துப்பாக்கிகளின் வடிவில் இருப்பதால் அவற்றை நிஜத் துப்பாக்கிகள் என்று யாராவது குழப்பமடைய வாய்ப்பிருக்கிறது என வாதிட்ட அதிகாரிகள், மார்க் ஜைஸ்லி, ஆயுதச் சட்டத்தை மீறி இருப்பதால், 6,500 ஃப்ராங்குகள்( 6,70,00 ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தான் ஆயுதச் சட்டத்தை மீறி இருப்பது தனக்குத் தெரியாது என்று கூறிய மார்க் ஜைஸ்லி, அபராதத் தொகையைச் செலுத்தி பிரச்சினையை முடித்து விட்டதாக ஆர்கர் ஸெய்துங் என்ற பத்திரிகை அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…