“மாயபிம்பம்” 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம். K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜானகி, ஆகாஷ், ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் சிறப்பம்சமாக, நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.
2005-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் காதல் கதை, அந்த காலத்து உணர்வுகளையும் நினைவுகளையும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் மட்டுமின்றி, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளும் அழகாக பின்னியமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும், 90-களில் வளர்ந்தவர்களுக்கு இனிய நினைவுகளாகவும் இந்த படம் அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் ஹிட் பாடலான “எனக்குள்ளே” பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை வாணி போஜன் வெளியிட்டனர். இருவரும் பாடலை பாராட்டி, படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், முன்னணி இயக்குநர் சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, பாடல்களையும் கேட்டுப் பாராட்டியுள்ளார்.
ஒரு அழகான காதல் அனுபவமாக உருவாகியுள்ள “மாயபிம்பம்” – வரும் 2026 ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படைப்பிற்காக கைகோர்த்துள்ளனர்.
தளபதி விஜய் மற்றும் எச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் 'தளபதி 69' (ஜனநாயகன்) திரைப்படம் தற்போது இந்திய திரையுலகின்…
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை…
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய் நடிக்கும் 69-வது திரைப்படம் 'ஜனநாயகன்'. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம்,
இயக்குநர் கீது மோகன்தாஸ் நயன்தாரா குறித்து கூறுகையில், “நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் (வயது 75) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று…