ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்: அ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘கே.ஜி.எஃப் சாப்டர் 2’ பிறகு யாஷ் நடிக்கும் படம் என்பதாலும், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிப்பதாலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் மார்ச் 19, 2026 அன்று கன்னடம், இங்கிலீஷ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், படக்குழு இன்று நயன்தாராவின் கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘கங்கா’ எனும் பெயரில் நயன்தாரா நடிக்கும் இந்த கதாபாத்திரம், இதுவரை அவர் ஏற்றதில்லாத ஒரு புதிய பரிமாணம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. போஸ்டரில், கருப்பு உடையில், தொடை உயர ஸ்லிட் கவுன் அணிந்து, துப்பாக்கியுடன் கேசினோ நுழைவாயிலில் நிற்கும் நயன்தாரா பவர்ஃபுல் மற்றும் ஆபத்தான தோற்றத்தில் காணப்படுகிறார். பின்னால் ஆட்கள் கதவுகளைத் திறந்து வழிவிடும் காட்சி, அவரது கதாபாத்திரத்தின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் நயன்தாரா குறித்து கூறுகையில், “நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் ‘டாக்ஸிக்’ படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்” என்றார்.
இதற்கு முன்பு கியாரா அத்வானி (நாடியா), ஹூமா குரேஷி (எலிசபெத்) ஆகியோரின் லுக் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றன. இப்படத்தில் ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி, இசை: ரவி பஸ்ரூர், எடிட்டிங்: உஜ்வல் குல்கர்னி, சண்டை இயக்கம்: ஜே.ஜே.பெர்ரி, அன்பறிவ், கெச்சா காம்பக்டி உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர்.
நயன்தாராவின் இந்த புது அவதார் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘டாக்ஸிக்’ படத்தின் அடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…