Download App

தலைவர் 173: உலகநாயகன் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் – கோலிவுட்டின் மெகா கூட்டணி!

தை 3, 2026 Published by Natarajan Karuppiah

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படைப்பிற்காக கைகோர்த்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் உருவாகும் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர்: ‘டான்’ பட புகழ் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார். முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது சிபி சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிப்போன அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்தத் திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள போஸ்டரில் “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஹீரோ உண்டு” (Every Family Has A Hero) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. பின்னணியில் தையல் கலைஞர்கள் பயன்படுத்தும் கத்தரிக்கோல், ஊசி, நூல் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்கள் சிதறிக்கிடக்கின்றன. இது ஒரு குடும்ப பின்னணி கொண்ட ஆக்ஷன் படமாகவோ அல்லது தையல் தொழில் பின்னணியில் மறைந்திருக்கும் ஒரு ரகசிய வீரனின் கதையாகவோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி-கமல் கூட்டணி (தயாரிப்பாளராகவும் நடிகராகவும்) இணைந்திருப்பது தமிழ் திரையுலகில் ஒரு வரலாற்றுத் தருணமாகப் பார்க்கப்படுகிறது. அனிருத்தின் இசை மற்றும் சிபி சக்கரவர்த்தியின் கமர்ஷியல் திரைக்கதை இணைந்து ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

More News

Trending Now