Download App

சசிகுமார் நடிக்கும் “மை லார்ட்” முதல் பாடல் “எச காத்தா” நாளை ரிலீஸ்!

கார்த்திகை 18, 2025 Published by anbuselvid8bbe9c60f

mylord

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் “மை லார்ட்” திரைப்படத்தின் முதல் பாடல் நாளை (நவம்பர் 19, 2025) வெளியாகிறது.

‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜப்பான்’ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் முதன்முறையாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். நடிகர் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. டப்பிங் பணிகளும் தீவிரமாக நடந்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘எச காத்தா’ நாளை மாலை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை சின்மயி & சத்யபிரகாஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

my Lord1

கடந்த ஆண்டு ‘கருடன்’, ‘நந்தன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கும் சசிகுமாருக்கு இப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாடலுடன் “மை லார்ட்” பயணம் தொடங்குகிறது… ரசிகர்கள் ரெடியா?