ஒரு தீயணைப்புப் படை வீரரின் தேடல்! 17 வருடங்களுக்கு முன் காப்பாற்றிய குழந்தையை சந்தித்தார்!

17 வருடங்களுக்கு முன், 2008 ல், உலகின் ஆப்பிள் தலைநகரமான வாஷிங்டனின் வெனாட்ச்சி பகுதியில் பணிபுரிந்த மைக் ஹ்யூஸ் என்ற தீயணைப்புப் படை வீரருடைய அலுவலகத்திற்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அந்த பகுதியில் ஒரு வீட்டில் தீப் பிடித்து விட்டதாக வந்த செய்திய அடுத்து வேகமாக தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்தனர்.
பாதி எரிந்த நிலையில் தீ வேகமாக பரவிக் கொண்டிருந்த வீட்டில்  நுழைந்த தீயணைப்புப் படையினர் உள்ளே இருந்தவர்களை வெளியே கொண்டுவந்தனர். எரியும் வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாகத் தேடிய மைக் ஹ்யூஸின் காதுகளில் அந்த சன்னமான அழுகுரல் கேட்டது. ஒரு  தொட்டிலில் அழுது கொண்டிருந்தது ஒரு  குழந்தை.! மனம் பதைபதைக்க குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார் மைக். குழந்தையை பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு பணி முடிந்து வீடு திரும்பிய மைக்கின் மனதை விட்டு அகல மறுத்தது, அந்த குழந்தையின் முகம்.
ஒரு நாளல்ல, ஒரு வாரமல்ல, பல மாதங்கள் ஆகியும், அவருக்கு அந்த குழந்தையின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. 17 வருடங்கள் உருண்டோடி  விட்டன. மைக் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், அந்த குழந்தையின் நினைவு மட்டும் அவர் மனதிலிருந்து மறையவே இல்லை. அந்த குழந்தை ஆணா பெண்ணா? அதன் பெயர் என்ன எதுவும் தெரியாத நிலையில் அந்த குழந்தை இப்போது என்ன செய்கிறது எப்படி இருக்கிறது என்று அறியும் ஆவல் அவருக்கும் எழுந்துகொண்டே ஈருக்கிறது.
உடன் பணிபுரிந்த தீயணைப்பு வீரர்களிடம் விசாரிக்கும் போது அவர்களுக்கு சம்பவம் மட்டும் நினைவிருந்ததே தவிர அது பற்றிய வேறு எந்த தகவலும் நினைவில் இல்லை. 
மைக் எப்போதுமே தன் தாயுடன் மனதிலுள்ள எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார். ஒருநாள் தமது மனதிலுள்ள தேடலைப் பற்றி  விவரித்த போது, அவரது தாயார் உதவ முன்வந்தார். மகனைப் பற்றிய செய்திகள் செய்திதாள்களில் வரும் போதெல்லாம் அதை வெட்டி சேகரிப்பது அவரது வழக்கம். அப்படி ஒரு செய்திதாள் துண்டிலிருந்து  மைக் காப்பாற்றிய குழந்தையின்பெயர் டானியேல்லா டேவிட்ஸன் என்று தெரிய வருகிறது. மைக் அந்த பெயரை முகநூலில் தேட ஆரம்பிக்கிறார். ஏராளமான ஏமாற்றங்களுக்குப் பின் டானியேல்லா டேவிட்ஸனைக் கண்டுபிடிக்கிறார், மைக். 
நடந்த சம்பவத்தைப் பற்றியோ,மைக்கை பற்றியோ எதுவும் தெரியாத டானியேல்லா குழம்பிய நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு நடந்த விஷயங்களைப் பற்றி சொல்கிறார்கள். ஆனால், எல்லாருக்குமே  குழந்தையைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர் 17 ஆண்டுகளாக அவளை மறக்காமல் இப்போது தேடுகிறார் என்ற செய்தி மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது. டானியேல்லாவும், மைக்கும் நண்பர்களாகி விட்டார்கள். மைக் இல்லாஇட்டால், என்னவாகி இருக்கும் என்று கண்ணீர் மல்க கூறும் டானியேல்லா அவரை தமது பள்ளி இறுதி பட்டமளிப்பு விழாவுக்கு வர வேண்டும் என்று அழைக்கிறார். முதல் முதலாக 17 வருடங்களுக்குப் பிறகு, வித்தியாசமான இந்த நண்பர்கள் சந்திக்கிறார்கள். முழு குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்குகிறது. 
சில அழகான உறவுகள் இப்படித் தான். ஒரு சில  நிமிட சந்திப்பாக தொடங்கி, ஏனென்று தெரியாத ஒரு பிணைப்புடன்  வாழ்நாள் முழுவதும் தொடரும். 
 

anbuselvid8bbe9c60f

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago