Download App

அசிங்கம் எனப் பெயர் பெற்ற மீன் இந்த ஆண்டின் சிறந்த மீன் ஆனது!

May 28, 2025 Published by anbuselvid8bbe9c60f

உலகிலேயே அசிங்கமான மீன் என்ற பெயர் வாங்கிய ப்ளாப்ஃபிஷ், நல்லுள்ளம் கொண்ட நியூஸிலாந்து மக்களால் 2025ன் சிறந்த மீனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மிஸ்டர் ப்ளாபி என்ற செல்லப் பெயருடன் 30 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக் கூடிய இந்த மீன், “அழகற்ற விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தின் அதிகாரப் பூர்வச் சின்னமாகவும் உள்ளது. 
உருண்டையான தலையும், தொள தொளவென்ற தளர்வான தோலும் கொண்ட இந்த ஆழ்கடல் மீன் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குக் கடல்பகுதியிலும், டாஸ்மேனியா மற்றும் நியூஸிலாந்திலும் காணப்படுகிறது.
 ஜவ்வு போன்ற தோலும், தலைப்பிரட்டைப் போன்ற தோற்றமும் கொண்ட இது, தன் இயற்கை வாழிடமான 2000 அடி – 4000 அடி ஆழ கடற்படுகையில் நீந்தும் போது, மற்ற மீன்களைப் போலவே தோற்றமளிக்கிறது. ஆனால், நீரழுத்தம் இல்லாத கடல் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டால், இதன் தளர்வான தோல், வடிவத்தை இழந்து, குழைத்து பிசைந்த களிமண் போல தாறுமாறாகி விடுகிறது.
“மலை முதல் கடல் வரை” என்ற விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு நடத்திய இந்த ” இங்த ஆண்டின் சிறந்த மீன்” போட்டியில் ஒட்டுமொத்த 5500 வாக்குகளில் 1300 வாக்குகளைப் பெற்று ப்ளாப்ஃபிஷ் முதலிடத்தை வென்றது.
வாக்கெடுப்பின் இறுதிகட்டத்தில்  கிடைத்த அதிகமான வாக்குகளால், போட்டியாக நின்ற இன்னொரு ஆழ்கடல் மீனான ஆரஞ்சு ரஃபியை 300 வாக்குகள் வித்தியாசத்தில் ப்ளாப் ஃபிஷ் வென்றது. 
இறுதி நேர வாக்குகளைப் பெற்று தந்த பெருமை சாரா கேண்டி, மற்றும் பால் ஃப்ளின் என்ற ரேடியோ ஜாக்கிகளையே சேரும். ரேடியோ நேயர்களை ப்ளாப்ஃபிஷ்ஷுக்கு வாக்களிக்க சொல்லி ஊக்கப்படுத்தி அதை வெற்றி பெற வைத்த இவர்கள், “நாங்களும் நியூஸிலாந்தும் மற்ற மீன்களே எப்போதும் வெற்றி பெறுவதைப் பார்த்து பார்த்து சலித்துப் போய் விட்டோம். இந்த முறை ப்ளாப் ஃபிஷ்ஷை ஜெயிக்க வைப்பதில் உறுதியாக இருந்தோம். ” என்றார்கள். 

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.