நேரம் குறிச்சாச்சு.. நாளை மாலை “தளபதி கச்சேரி..” ஜனநாயகன் முதல் பாடல் அப்டேட்

விஜயின் கடைசி படமாக எதிர்பார்க்கப்படும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் நேரம் உறுதியானது. நாளை (நவம்பர் 8) மாலை 6:03 மணிக்கு “தளபதி கச்சேரி” என்ற பாடல் வெளியாகிறது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள இந்த படம், அவரது அரசியல் பயணத்திற்கு முன் வெளியாகும் கடைசி படமாக கருதப்படுகிறது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 2026 ஜனவரி 9-ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், “தளபதி கச்சேரி.. நாளை மாலை 6:03” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் அரசியல் ஈடுபாட்டை முன்னிட்டு இந்த படம் குறித்து மக்கள் மத்தியில் உச்ச உச்சமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் முதல் பாடல் ரிலீஸ் நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் நேரலையாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

anbuselvid8bbe9c60f

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

5 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago