திரைப்பட செய்திகள்

சென்னையில் அதிர்ச்சி: அடையாறு ஆற்றில் குதித்து பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!

தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.ராஜன் (வயது 85) சென்னையில் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த சினிமாத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது ஓட்டுநருடன் காரில் புறப்பட்ட கே.ராஜன், சென்னை அடையாறு திரு.வி.க பாலம் அருகே காரை நிறுத்தச் சொல்லியுள்ளார். சற்று நேரம் காலாற நடந்து வருவதாக ஓட்டுநரிடம் கூறிவிட்டுச் சென்ற அவர், எதிர்பாராத விதமாக திடீரென பாலத்தின் மீதிருந்து கீழே பாய்ந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்களும், ஓட்டுநரும் உடனடியாகக் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சைதாப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாலை சுமார் 5.15 மணியளவில் கே.ராஜனின் உடல் மீட்கப்பட்டது.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தத் துயரச் செய்தியை அவரது மகன் பிரபுகாந்தும் உறுதிப்படுத்தியுள்ளார்.

85 வயதான மூத்த சினிமா ஆளுமை ஒருவர் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அடையாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக அவர் குடும்பப் பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.அவர் ஏதேனும் கடிதம் (Suicide Note) எழுதி வைத்துள்ளாரா என்றும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

1980-களின் தொடக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவில் தீவிரமாக இயங்கி வந்தவர் கே.ராஜன்.

தயாரிப்பு மற்றும் இயக்கம்: ‘கணேஷ் சினே ஆர்ட்ஸ்’ நிறுவனம் மூலம் ‘பிரம்மச்சாரிகள்’, ‘டபுள்ஸ்’, ‘அவள் பாவம்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். அப்பாஸ் மற்றும் குணால் நடித்த ‘உணர்ச்சிகள்’ என்ற திரைப்படத்தை இயக்கியும் உள்ளார். அஜித்தின் ‘துணிவு’, செல்வராகவனின் ‘பகாசூரன்’ ஆகிய படங்களில் நடிகராகவும் முகம் காட்டியுள்ளார்.

சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த இவர், சினிமா மேடைகளிலும், யூடியூப் நேர்காணல்களிலும் யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாகப் பேசக்கூடியவர்.

“பெரிய நடிகர்கள் தங்களின் கோடிக்கணக்கான சம்பளத்தைக் குறைத்துக் கொண்டால்தான் சிறு தயாரிப்பாளர்களும், சாதாரண சினிமா தொழிலாளர்களும் பிழைக்க முடியும்” என்று முன்னணி நடிகர்களை நோக்கித் தொடர்ந்து மேடைகளில் சாடி வந்தவர். சினிமா தலைப்புகள் தமிழில் தான் வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

கே.ராஜனின் திடீர் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், நலிந்த தொழிலாளர்கள் எனப் பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காகத் தொடர்ந்து ஒலித்து வந்த ஒரு தைரியமான குரல் இன்று மௌனமாகிவிட்டது என்று திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

உதவி எண்கள்: மன உளைச்சலோ அல்லது தற்கொலை எண்ணங்களோ தோன்றினால், தமிழக அரசின் சுகாதார உதவி எண் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

Natarajan Karuppiah

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

6 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago