திரைப்பட செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு சினிமா: ரஹ்மான் ஓப்பன் டாக்

தமிழ், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடிப் படங்களை ஒப்புக்கொண்டு நீண்ட காலமாகிவிட்டது. இந்த விழாவில் அதுகுறித்துப் பேசிய அவர்:

“நான் ஏன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு நேரடித் தெலுங்குப் படத்திற்கு இசையமைக்கிறேன் என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் இந்தப் படத்தின் கதையும், இயக்குனர் புச்சி பாபுவின் அசாத்தியமான உழைப்பும்தான்,” என்று மனம்திறந்து பாராட்டினார்.

இயக்குனர் புச்சி பாபுவின் உழைப்பைப் பற்றி மேடையில் மிகவும் சிலாகித்த ஏ.ஆர்.ரஹ்மான், அவர் தனக்குக் கொடுத்த பாசிட்டிவ் பிரஷர் குறித்தும் கலகலப்பாகப் பேசினார்.

கதையைச் செதுக்கிய விதம் மற்றும் இசையை வாங்குவதில் புச்சி பாபு காட்டிய ஆர்வம் ரஹ்மானை மிகவும் கவர்ந்துள்ளது.”புச்சி பாபு என்னைத் துரத்தித் துரத்திக் வேலை வாங்கினார்” என்று ரஹ்மான் மேடையில் கிண்டலாகக் குறிப்பிட்டபோது அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

பிரபலங்களின் வருகையாலும், பிரம்மாண்டமான ஏற்பாடுகளாலும் மும்பை விழாவே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் ஆன்மார்க்கந்த இசையும், புச்சி பாபுவின் இயக்கமும் இணைந்து “பெத்தி” திரைப்படத்தை இந்திய திரையுலகில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை!

Natarajan Karuppiah

Recent Posts

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

1 மாதம் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

1 மாதம் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

1 மாதம் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

2 மாதங்கள் ago

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தயாரிக்கிறது

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…

2 மாதங்கள் ago

என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை! – மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…

2 மாதங்கள் ago