விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் ‘ரவுடி ஜனார்த்தனா’ – டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியீடு!
மார்கழி 24, 2025 Published by anbuselvid8bbe9c60f

டாலிவுட் நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் புதிய பான்-இந்தியா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் ‘ரவுடி ஜனார்த்தனா’ (Rowdy Janardhana) என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1980-களின் கிழக்கு கோதாவரி பகுதியை பின்னணியாகக் கொண்ட இந்த ஆக்ஷன் டிராமா, ஒரு காயம்பட்ட மனிதனின் வாழ்க்கை வரலாறு என விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர்.

இசை: கிறிஸ்டோ சேவியர் ஒளிப்பதிவு: ஆனந்த் சி. சந்திரன்
டைட்டில் க்ளிம்ப்ஸில், கையில் அரிவாளுடன் ரத்தம் தெறித்த உடலுடன் தோன்றும் விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமப்புற பின்னணியில் அமைந்த இந்த க்ளிம்ப்ஸ், தீவிரமான வன்முறை மற்றும் உணர்ச்சிகரமான கதைக்களத்தை உறுதிப்படுத்துகிறது.
இப்படம் 2026 டிசம்பர் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.















