தமிழ் சினிமாவின் தளபதி விஜய்யின் இறுதித் திரைப்படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ இன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அ.வினோத் இயக்கத்தில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம், 2026 பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரவுள்ளது.
விஜய்யின் கடைசி நடிப்புப் பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் 6-வது முறையாக விஜய்யுடன் இணைந்து இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய், அனிருத், ராப்பர் அறிவு மூவரும் பாடியுள்ள இப்பாடலுக்கு வரிகளை அறிவு எழுதியுள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோருடன் விஜய் அதிரடி நடனமாடியுள்ளார். நடன இயக்குநர் சேகர் கோரியோகிராஃபி செய்துள்ளார்.
லிரிகல் வீடியோவில் ஹூக் ஸ்டெப் நடனப் பயிற்சியும் இணைக்கப்பட்டுள்ளது. ‘பறக்கட்டும் நம்ம கொடி’, ‘சாதி, மதம் லேதய்யா’ போன்ற வரிகள் சமூக ஒற்றுமை, எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்துகின்றன.
#ThalapathyKacheri, #Jananayagan ஹேஷ்டேக்குகளுடன் சமூக வலைதளங்களில் பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது. பொங்கல் கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக இப்பாடல் மாபெரும் வெற்றியை நோக்கி பயணிக்கிறது!
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.