Download App

விஜய் சேதுபதியின் பான்-இந்தியா ஆக்ஷன் படம் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு!

கார்த்திகை 24, 2025 Published by anbuselvid8bbe9c60f

vjs

‘மகாராஜா’ வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி கமிட் ஆன மிக முக்கியமான பான்-இந்தியா திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துள்ளது!

இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்திருக்கும் இந்த ஆக்ஷன் என்டர்டெய்னரில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை தபு மற்றும் சம்யுக்தா மேனன் நடித்துள்ளனர். இந்த காஸ்டிங் அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

vjs1

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மி கவுர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்: “விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுவிட்டது. மிக விரைவில் முக்கிய அறிவிப்புகளுடன் உங்களைச் சந்திக்கிறோம்!”

பிரம்மாஜி, துனியா விஜய் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ‘கோல்டன்’ ஹிட் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்திருக்கிறார்.

vjs2

கடந்த செப்டம்பர் மாதமே படத்தின் தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் தாமதமானது. தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ளதால், தலைப்பு உட்பட அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்!