தயாரிப்பாளர் சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ‘கோட்’ (The Greatest Of All Time) படத்தைத் தயாரித்த கல்பாத்தி குடும்பத்தினருடன் நடிகர் விஜய் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டவர் என்பதால், அவர் வருகை தருவார் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் ஜோடியாக விஜய் மற்றும் த்ரிஷா வலம் வருகின்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்:
நடிகர் விஜய் மிகவும் எளிமையான தோற்றத்தில் வருகை தந்து, மணமக்களை வாழ்த்தினார். தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருடன் அவர் உரையாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.நடிகை த்ரிஷா அழகான சேலையில் தேவதை போல் வந்திருந்த த்ரிஷா, மணமக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இருவரும் தனித்தனியாக வந்து மணமக்களை வாழ்த்தினாலும், ஒரே சுப நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கல்பாத்தி குடும்பத்தினருடன் விஜய் அமர்ந்து பேசும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், மணிரத்னம் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
'லால் சலாம்' திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த அதிரடி படைப்பான 'டெக்ஸ்லா'
தமிழ் சினிமாவில் நடிகர்கள் இயக்குநர்களாக மாறுவது ஒன்றும் புதியதல்ல. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகர் ரவி மோகன்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், வெறும் நடிகர் மட்டுமல்ல; அவர் ஒரு தீவிரமான கார் பந்தய வீரர்…
'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக தடம் பதித்த தொழிலதிபர் லெஜண்ட் சரவணன், தற்போது தனது இரண்டாவது…
தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், தனது அறிமுகப் படமான 'தி லெஜண்ட்' படத்திற்குப் பிறகு மீண்டும் பெரிய திரைக்குத்…
ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடான ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸை அறிவித்துள்ளது.