நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம்: நீதிமன்ற மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
மாசி 27, 2026 Published by Natarajan Karuppiah

கடந்த சில காலங்களாகவே நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான திருமண வாழ்க்கை சட்ட ரீதியான பிரிவை நோக்கி நகர்ந்துள்ளது. சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், திருமண முறிவிற்கான காரணங்கள் மற்றும் அவர் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மனுதாரர் சங்கீதாவின் கூற்றுப்படி, ஏப்ரல் 2021-இல் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார். இது தமக்கு ஆழ்ந்த மனவேதனையை அளித்ததாகவும், திருமண பந்தத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் இந்த உறவை முடித்துக் கொள்வதாக விஜய் வாக்குறுதி அளித்த போதிலும், வருத்தம் ஏதுமின்றி அந்தத் தொடர்பைத் தொடர்ந்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.

2021 முதல் விஜய் உணர்ச்சி ரீதியாகத் தன்னிடமிருந்து விலகிவிட்டதாக சங்கீதா தெரிவித்துள்ளார்.விஜய் தன்னைத் தொடர்ந்து அவமதித்து வந்ததாகவும், திருமண இல்லத்தில் தனிமையில் வாழுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
விஜய்யின் சமூக மற்றும் தொழில்முறை வாழ்க்கையிலிருந்து தான் திட்டமிட்டே ஒதுக்கி வைக்கப்பட்டதாக சங்கீதா மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பிட்ட அந்த நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றதாகவும், அந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானபோது விஜய் அதைத் தடுக்கவோ, மறுக்கவோ இல்லை என்றும் கூறப்படுகிறது. இது தனக்கும் தனது குழந்தைகளுக்கும் சமூக வட்டாரத்தில் பெரும் சங்கடத்தையும், பொதுவெளியில் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக சங்கீதா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க 2024 முதல் முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், விஜய் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. மாறாக:மனைவி என்ற முறையில் அனுபவித்து வந்த வசதிகள் பறிக்கப்பட்டன.கடுமையான நிதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.சுதந்திரமான நடமாட்டத்திற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.விஜய்யின் பதில்கள் நிதி ஆதிக்கத்தையும், மேட்டிமை உணர்வையும் காட்டுவதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த நடிகையின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாத சங்கீதா, தேவைப்பட்டால் அவரை வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகச் சேர்க்கும் உரிமையைத் தன்னிடம் வைத்துள்ளார்.
நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:
1999 ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்ற திருமணத்தை, 1954-ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ரத்து செய்ய வேண்டும்.

இறுதித் தீர்ப்பு வரும் வரை அல்லது மாற்று இடம் கிடைக்கும் வரை, நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிக்கும் உரிமையை வழங்க வேண்டும்.
விஜய்யின் அந்தஸ்திற்கு இணையான மற்றும் நியாயமான நிரந்தர ஜீவனாம்சம் (Alimony) வழங்கப்பட வேண்டும்.
திருமண பந்தம் மீளமுடியாத அளவிற்கு முறிந்துவிட்டதால், சட்டப்படி பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று சங்கீதா தனது மனுவில் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

















