நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த யோகி பாபு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. இது அவரது திரைப்பயணத்தில் 300வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேவ் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ள இப்படம், பழைய வாகனங்கள் விற்பனையில் நடக்கும் மோசடிகள், அதனால் பாதிக்கப்படும் மக்களின் வலிகள் ஆகியவற்றை மையப்படுத்தியது. மேலும், பழைய வாகனங்கள் வாங்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
யோகி பாபுவுக்கு ஜோடியாக அனாமிகா மகி நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்பிரமணியன் சிவா, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன், ரஞ்சன் குமார், இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா, இசை: இமான், படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன்.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில்…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films…
இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம்…
திரு.கமல்ஹாசன் அவர்கள் 2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப்…
தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது.
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன்…