நடிகர் ஆர்யாவின் 40-வது படம்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!
December 12, 2025 Published by Natarajan Karuppiah

நடிகர் ஆர்யா தனது திரைப் பயணத்தின் 40-வது படத்தைத் தொடங்கியுள்ளார். இந்தப் புதிய திரைப்படத்துக்கான பூஜை விழா நேற்றுகோலாகலமாக நடைபெற்றது.
இந்தப் படத்தை மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நிகில் முரளி இயக்குகிறார். இவர் இதற்கு முன்னர் 2023-ல் வெளியாகி கவனம் ஈர்த்த ‘ப்ரணயவிலாசம்’ என்ற படத்தை இயக்கியவர்.

படத்துக்கு இசைப் புயல் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.ஆர்யாவின் மனைவி மற்றும் நடிகையுமான சயீஷா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’, ‘மின்மினி’ போன்ற தரமான படங்களை இயக்கியதன் மூலம் அறியப்பட்ட இயக்குநர் ஹலிதா ஷமீம், இந்தப் படத்துக்கான வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார்.

இந்த முக்கியக் கூட்டணி இணைந்திருப்பதால், ஆர்யாவின் 40-வது படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
















