Download App

நடிகர் ஷாம் இயக்குநராக அவதாரம்! ‘வரும் வெற்றி’ இசை ஆல்பத்துடன் களமிறங்குகிறார் !

December 5, 2025 Published by anbuselvid8bbe9c60f

தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக ரசிகர்களின் அபிமான நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் ஷாம், இப்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். முதல் முறையாக இயக்குநர் குல்லா அணிந்து, ‘வரும் வெற்றி’ எனும் இசை ஆல்பத்தை தயாரித்து இயக்கியுள்ளார் ஷாம்!

SIR ஸ்டுடியோஸ் பேனரில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் ஷாமுடன் கவர்ச்சி நடிகை நிரா ஜோடியாக நடித்துள்ளார். இசை அமைப்பாளர் அம்ரிஷின் புத்தம் புதிய இசையில், பிரபல கொரியோகிராபர் ஸ்ரீதர் மாஸ்டர் அசத்தலான நடன அசைவுகளை வடிவமைத்துள்ளார்.

இதிலும் ஒரு மெகா சர்ப்ரைஸ்! கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் இந்தப் பாடலை தனது கம்மி குரலில் பாடியுள்ளார். இது ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா டோஸ் உற்சாகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல இசை நிறுவனமான டி சீரிஸ் இந்த ‘வரும் வெற்றி’ ஆல்பத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. விரைவில் இந்த ஆல்பம் ரிலீஸாக உள்ள நிலையில், ஷாமின் இயக்குநர் அவதாரத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்!