மீண்டும் இணையும் மெகா கூட்டணி: சிவகார்த்திகேயன் – கமல்ஹாசன் இணையும் ‘சேயோன்’!
மாசி 16, 2026 Published by Natarajan Karuppiah

‘அமரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்படத்திற்கு ‘சேயோன்’ (Seyon) என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் கடவுளான முருகனின் பெயர்களில் ஒன்றான ‘சேயோன்’ என்ற பெயரே இப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘தாய்கிழவி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இது ஒரு கிராமத்து பின்னணியில் அமைந்த ஆக்ஷன் மற்றும் ஃபேன்டஸி கலந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவகார்த்திகேயன் கையில் வேல் போன்ற ஆயுதத்துடனும், மயில்களுக்கு மத்தியிலும் ஒரு புதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமரன்’ திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்ததால், இந்தக் கூட்டணியின் இரண்டாவது படமான ‘சேயோன்’ மீதான எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தை எட்டியுள்ளது.

















