திரைப்பட செய்திகள்

க்யூட்டாக ‘போட் டான்ஸ்’ ஆடிய அஜித் மகன் ஆத்விக்… வைரலாகும் அசத்தல் வீடியோ!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து சிறிது இடைவெளி எடுத்து, தனது ஆர்வமான கார் ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தற்போது மலேசியாவின் செபாங் சர்வதேச சர்க்யூட்டில் நடைபெற்று வரும் மைக்கெலின் 12 அவர்ஸ் மலேசியா மற்றும் ஆசியன் லே மான்ஸ் சீரிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அஜித் குமார் தலைமையிலான ‘அஜித் குமார் ரேசிங்’ அணி, இந்த போட்டிகளில் தீவிரமாக கலந்து கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய ரேஸிங் தொடர்களில் பங்கேற்று வரும் அஜித், இம்முறை மலேசியாவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். போட்டியின் போது அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் அவருக்கு ஆதரவாக வந்துள்ளனர். துபாய், ஐரோப்பா போன்ற வெளிநாட்டு போட்டிகளிலும் அஜித்தின் குடும்பத்தினர் எப்போதும் அவருடன் இருப்பது வழக்கம்.

இந்நிலையில், மலேசியா போட்டியின் போது அஜித்தின் மகன் ஆத்விக் மைதானத்தில் ஆடிய ‘போட் டான்ஸ்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. க்யூட்டாக ஆடிய ஆத்விக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் தீவிரமாக ஷேர் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்தும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘குட் பேட் அக்லி’யை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் 64வது படத்தையும் (AK64) இயக்க உள்ளதாக உறுதியாகியுள்ளது. ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், 2026 ஜனவரி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேஸிங் சீசன் முடிந்த பிறகு முழு கவனத்தை சினிமாவில் செலுத்த உள்ள அஜித், ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பிரமாண்ட விருந்து அளிக்க தயாராகி வருகிறார்!

anbuselvid8bbe9c60f

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago