தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9, 2026 அன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன் ரசிகர்களுக்கு அளிக்கும் இறுதி விருந்தாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படமும் இடம்பிடித்துள்ளது. ஆரம்பத்தில் ஜனவரி 14 அன்று ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ்நாட்டில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்கள் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. படக்குழு சார்பில் ஜனவரி 10 அன்று படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் ஜனநாயகனுடன் நேரடி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (டிசம்பர் 18) நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில், இன்று பராசக்தி ரிலீஸ் தேதி மாற்றம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இருப்பினும் இது இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பதால், உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் வரும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. பொங்கல் 2026 தமிழ் சினிமாவுக்கு பிரமாண்ட போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது!
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.