பான்-இந்தியா ஸ்டாரான நடிகர் அல்லு அர்ஜுன், தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் பிரம்மாண்ட சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். போலிவுட் நடிகை தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அல்லு அர்ஜுனின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.
அல்லு அர்ஜுன், இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உடன் மீண்டும் இணையும் புதிய படத்தில் நடிக்க உறுதியாகியுள்ளார். இதற்கு முன்பு ‘ஜூலாயி’, ‘S/O சத்தியமூர்த்தி’, ‘அலா வைகுந்தபுரமுலோ’ போன்ற படங்களில் இணைந்துள்ள இந்த வெற்றிகரமான கூட்டணி, மறுபடியும் ஒன்றிணைகிறது. குறிப்பாக ‘அலா வைகுந்தபுரமுலோ’ தென்னிந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்று நல்ல வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய படம் ஆயிரம் கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. புராண காவியம் சார்ந்த கதைக்களத்தை கொண்டிருக்கும் இப்படம், பிப்ரவரி 2027-ல் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இதே கதையை த்ரிவிக்ரம் இயக்கவுள்ளதாகவும், அல்லு அர்ஜுன் பிசியாக இருப்பதால் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகும் எனவும் தகவல்கள் பரவின. குறிப்பாக இது முருகனை மையப்படுத்திய கதையென கூறப்பட்டது. தற்போது அல்லு அர்ஜுனே இதில் நாயகனாக நடிக்க உறுதியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அல்லு அர்ஜுனின் தொடர் பிரம்மாண்ட ப்ராஜெக்ட்களால் தெலுங்கு சினிமாவின் பான்-இந்தியா ஆதிக்கம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 'கூலி' (Coolie)…
'லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வரும் நடிகர்-இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான…
தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படத்தின் மூன்றாவது சிங்கிள் 'செல்ல மகளே...' இன்று (டிசம்பர் 26) வெளியாகி…
தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' வரும் ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 81 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வார…
மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 22 மற்றும் 23, 2025 அன்று அதன் 19-வது…