திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த இவருக்கு தற்போது 48 வயதாகிறது. ஆனால், இன்றும் அதே பொலிவுடனும், இளமையுடனும் வலம் வரும் சுரேகாவை பார்த்தால், அவருக்கு இவ்வளவு வயது இருக்கும் என்று சொன்னால் பலரும் நம்ப மறுக்கின்றனர்.
தற்போது தனது மகளுடன் வசித்து வரும் சுரேகா வாணியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த அவரது மகள் சுப்ரிதா களம் இறங்கியுள்ளார்.
தனது கணவரை இழந்த பிறகு மகளே உலகம் என வாழ்ந்து வரும் சுரேகாவுக்கு, மீண்டும் ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க சுப்ரிதா திட்டமிட்டுள்ளார். இது குறித்து சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் உருக்கமாகப் பேசியுள்ளார்.
“என் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க நான் ஆசைப்படுகிறேன். எனக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பே, அம்மாவின் திருமணம் நடக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.” – சுப்ரிதா
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தனது உறவினர்களிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாகக் கூறும் சுப்ரிதா, அம்மாவிற்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்
அம்மாவை மிகவும் அன்பாகப் பார்த்துக் கொள்ளும் குணம் கொண்டவராக இருக்க வேண்டும்.அம்மாவின் விருப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.”என் அப்பாவின் இடத்தை வேறு யாருக்கும் தரக்கூடாது என்று அம்மா நினைக்கிறார், அந்த உணர்வை நானும் மதிக்கிறேன்,” என்று சுப்ரிதா கூறியுள்ளார்.
சுரேகா வாணியும் அவரது மகள் சுப்ரிதாவும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள். இருவரும் இணைந்து பதிவிடும் நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எப்போதும் வைரலாகும். தற்போது, ஒரு மகளாக தனது தாயின் எதிர்காலத்தைப் பற்றி சுப்ரிதா எடுத்துள்ள இந்த முதிர்ச்சியான முடிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தாயின் தனிமையைப் போக்கி, அவருக்கு ஒரு நிம்மதியான வாழ்வை அமைத்துக் கொடுக்கத் துடிக்கும் மகளின் இந்த அன்பு, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…
மலையாளத் திரையுலகின் 'வெர்சடைல்' நடிகர் ஃபஹத் பாசில், தற்போது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகராக உருவெடுத்துள்ளார்