Download App

பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தை உறுதி செய்த அர்ச்சனா கல்பாத்தி!

மார்கழி 17, 2025 Published by anbuselvid8bbe9c60f

pr

‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி அளித்த பேட்டியில், “பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். அப்படத்தை ஏஜிஎஸ் தயாரிக்கிறோம். இது மிகவும் உற்சாகமான படம். 2026-ல் படப்பிடிப்பு தொடங்கி, அதே ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

இதன் மூலம் ஏஜிஎஸ் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. ஏற்கனவே ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை தயாரித்த ஏஜிஎஸ், ‘டியூட்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படம் பிரதீப் ரங்கநாதனின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் என்றும், சயின்ஸ் பிக்ஷன் பாணியில் அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதனின் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு இப்படம் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது!

Trending Now

No trending articles in this category from the last 3 days.