பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம்: நாயகியாக மீனாட்சி சவுத்ரி – பேச்சுவார்த்தை நடந்து வருகிறது!
மார்கழி 26, 2025 Published by anbuselvid8bbe9c60f

‘லவ் டுடே’ வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வரும் நடிகர்-இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (LIK) படத்தை முடித்துவிட்டார். இப்படம் வெளியீடு தாமதமடைந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்குநர் கதிரையில் அமர்ந்து, தானே நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.
இப்படம் சயின்ஸ் பிக்ஷன் பாணியில், ஆக்ஷன் கலந்த கதைக்களத்துடன் உருவாகவுள்ளது. படப்பிடிப்பு 2026 மார்ச் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக படமாக்கி முடித்து, 2026 இறுதியில் திரையரங்குகளில் வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழ்-தெலுங்கு இருமொழி ரொமாண்டிக் என்டர்டெய்னராக உருவாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘லவ் டுடே’வுக்குப் பிறகு பிரதீப் இயக்கி நடிக்கும் படம் என்பதால், இது அவரது கேரியரில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது!




















