Download App

பிக்பாஸ் தினேஷ் மோசடி புகார்: கைது செய்தியை மறுத்து வீடியோ வெளியிட்டார்!

கார்த்திகை 13, 2025 Published by Natarajan Karuppiah

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகர் தினேஷ், மோசடி புகாரில் கைதானதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளுக்கு மறுத்துள்ளார். “கைது அது இதுனு சொன்னாங்க.. அதெல்லாம் ஒன்னும் கிடையாது….” என்று தனது அதிகாரப்பூர்வ வீடியோவில் தெளிவாக மறுத்துள்ளார் தினேஷ்.

மோசடி தொடர்பான புகார் அடிப்படையில் போலீசார் தன்னை கைது செய்ததாக வெளியான தகவல்கள் தவறானவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் தினேஷ், “இது போன்ற தவறான செய்திகள் எனது ரசிகர்களை குழப்ப வேண்டாம். என்று கூறியுள்ளார்.

அந்த விடியோவில் பேசிய தினேஷ், “கருணாநிதி என்ற நபர் அவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றி விட்டதாகவும் இது குறித்து அவர் என்னிடம் பேசும்போது நான் அவரை தாக்கியதாகவும் பொய்யான புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

வள்ளியூரில் ஒரு வழக்கு தொடர்பாக பல வருடமாக போராடி வருகிறேன். அதற்காக என் எதிர் தரப்பின்னர் எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களை ஈர்த்த தினேஷ், தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த மோசடி புகார் தொடர்பான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், தினேஷின் வீடியோ அவரது ரசிகர்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினேஷின் ரசிகர்கள் அவருக்காக ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றனர்