Download App

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: கடைசி நிமிட அதிரடி எவிக்ஷனில் ‘வாட்டர்மெலான் ஸ்டார்’ திவாகர் வெளியேற்றம்!

கார்த்திகை 15, 2025 Published by Natarajan Karuppiah

விஜய் சேதுபதி நடத்தும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் இந்த வார எவிக்ஷன் சுற்று, ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த வாரத்தின் நாமினேஷன் பட்டியலில் 12 பேர் சேர்ந்திருந்த நிலையில், கானா வினோத், சபரிநாதன், கமருதீன், விக்கல்ஸ் விக்ரம், விஜே பாரு, ஏஃப்‌ஜே, துஷார், வியானா, கெமி, பிரவீன் ராஜ்தேவ், ரம்யா ஜூ ஆகியோருடன் ‘வாட்டர்மெலான் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் திவாகரும் பங்கேற்றிருந்தார்.

ஆனால், வாக்களிப்பின் முடிவுகளின் அடிப்படையில், திவாகரே குறைந்த வாக்குகளைப் பெற்று திவாகர் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளிவந்துகொண்டிருக்கின்றன. திவாகரின் நகைச்சுவை மற்றும் தைரியமான கமெண்ட்ஸுக்கு ஆதரவாக வாக்கு . இருப்பினும், அவரது சில வார்த்தைகள் – குறிப்பாக ரம்யாவுடனான வாக்குவாதத்தில் வந்த ‘கல்வி குறைவு, கிராம மர்மம்’ என்ற கருத்து – வீட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அவரது வாக்குகளை பாதித்ததாகத் தெரிகிறது.

சீசன் தொடங்கியது முதல் திவாகர் தனது யூனிக் ஸ்டைல்லால் ரசிகர்களை கவர்ந்தாலும், வீட்டினரின் நாமினேஷன்களிலும் அவர் அதிகம் சேர்ந்திருந்தார். முதல் வாரத்திலிருந்து அகோரி கலையரசன், விஜே பார்வதி உள்ளிட்டோருடன் அவர் நோமினேட் ஆகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த வாரம், பிரவீன் ராஜ்தேவ் ஏற்கனவே வெளியேறியிருந்த நிலையில், திவாகரின் வெளியேற்றம் இரட்டை அதிரடியாக அமைந்தது.

பிக் பாஸ் வீட்டில் இனி கானா வினோத், விஜே பாரு, துஷார், கானி திரு, சபரி நாதன், ரம்யா ஜூ, வியானா, விக்கல்ஸ் விக்ரம், கமருதீன், அகோரி கலையரசன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த எவிக்ஷன், அடுத்த வார டாஸ்க்குகளையும் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திவாகரின் வெளியேற்றத்தை விவாதித்து வருகின்றனர். அடுத்த எவிக்ஷன் எப்போது, யார் வெளியேறுவர் என்பது குறித்து அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News