பொங்கல் ரேஸில் இணைந்த ‘திரௌபதி 2’
தை 10, 2026 Published by Natarajan Karuppiah

2020-ம் ஆண்டு வெளியான ‘திரௌபதி’ திரைப்படம் பெரும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி 23-ம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் ரிலீஸாக இருந்த சில பெரிய படங்களின் தேதிகள் மாற்றமடைந்ததைத் தொடர்ந்து, ‘திரௌபதி 2’ முன்கூட்டியே பொங்கல் களத்தில் இறங்குகிறது.

இயக்குநர்: மோகன் ஜி நடிகர்கள்: ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்சனா இந்துசூடன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஒய்.ஜி. மகேந்திரன், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை: ஜிப்ரான்.
இது ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது. 14-ம் நூற்றாண்டின் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு, வரலாற்றுப் பதிவுகளை தற்போதைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக இது இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘திரௌபதி 2’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று (ஜனவரி 10, சனிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ட்ரெய்லரில் படத்தின் கருப்பொருள் மற்றும் காட்சி அமைப்புகள் குறித்து கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

















