பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ரன்வீர் சிங், தனது சமீபத்திய அதிரடித் திரைப்படமான ‘துரந்தர்’ (Dhurandhar) படத்தின் பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டாடி வரும் வேளையில், அவருக்கு மர்ம நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று (பிப்ரவரி 9, 2026), ரன்வீர் சிங்கின் உதவியாளர் அல்லது செயலாளரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரிடமிருந்து குரல் செய்தி (Voice Note) வந்துள்ளது. அதில், ரன்வீர் சிங்கிடம் பல கோடி ரூபாய் (சுமார் ₹10 கோடி எனத் தகவல்) பிணைத் தொகையாகக் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பணம் தராவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அந்தச் செய்தியில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த மிரட்டலுக்குப் பின்னால் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருக்கலாம் என மும்பை காவல்துறை சந்தேகிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடிகர் சல்மான் கான் மற்றும் இயக்குநர் ரோகித் ஷெட்டி ஆகியோருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களின் தொடர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி ரோகித் ஷெட்டியின் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல் வந்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் குறித்து ரன்வீர் சிங் தரப்பிலிருந்து மும்பை காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து. மத்திய மும்பையில் உள்ள ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியின் இல்லத்திற்கு வெளியே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆறுக்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய தனியார் பாதுகாவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மும்பை குற்றப்பிரிவு (Crime Branch) போலீசார் இந்த மிரட்டல் வந்த எண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நடிகர் ரன்வீர் சிங்கின் வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிற மக்கள் சற்றே கவலையடைந்துள்ளனர். பொதுவான இடங்களான ஜிம், லிப்ட் மற்றும் விளையாட்டு மைதானங்களில் ஆயுதமேந்திய காவலர்கள் நடமாடுவது தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக அவர்கள் தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது.
ரன்வீர் சிங் தற்போது தனது அடுத்த படமான ‘துரந்தர் 2’ (Dhurandhar: The Revenge) ரிலீஸிற்காகக் காத்திருக்கிறார். மிரட்டல் விடுத்த நபர்களைப் பிடிக்க மும்பை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.