Download App

தேரே இஷ்க் மெயின் வெளியீட்டுக்கு முந்தைய நாள்: காசியின் தெருக்களில் மீண்டும் ‘குந்தன்’ ஆன தனுஷ் – உருக்கமான இன்ஸ்டா பதிவு வைரல்!

கார்த்திகை 27, 2025 Published by anbuselvid8bbe9c60f

dhanush3

நாளை (நவம்பர் 28) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் தனுஷின் பாலிவுட் கம்பேக் படம் தான் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் கிருத்தி ஷனோனுடன் இணைந்து நடித்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’.

பட வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்பாக, இயக்குநர் ஆனந்த் எல்.ராய், தனுஷ், கிருத்தி ஷனோன் ஆகியோர் வரானசியில் உள்ள புனித கங்கை கரையில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர். அந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்காகின.

dhanush2

அதைத் தொடர்ந்து, 2013-ல் தனுஷை ‘குந்தன்’ ஆக்கி பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக மாற்றிய ‘ராஞ்சனா’ படத்தின் படப்பிடிப்பு நடந்த அதே காசி தெருக்களுக்கு தனுஷ் மீண்டும் சென்றார். அந்த நினைவுச் சாலைகளில் நடந்து, அதே டீக்கடையில் அமர்ந்து, அதே வீட்டு முன் உட்கார்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

அதன் பிறகு தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார் தனுஷ்:

dhanush1

“‘குந்தன்’ பத்தாண்டுகளைத் தாண்டியும் என்னை விட்டுப் பிரியாமல் தொடரும் ஒரு கதாபாத்திரம். இன்றும் காசியின் குறுகிய தெருக்களில் நடக்கும்போது யாராவது ‘குந்தன்!’ என்று கூப்பிட்டால், நான் திரும்பிப் பார்த்து சிரித்துவிடுகிறேன். இப்போது மீண்டும் அதே தெருக்களில் நடக்கும் போது, அதே வீட்டின் முன் உட்காரும் போது, அதே டீக்கடையில் டீ குடிக்கும் போது, எனக்கு குந்தனை அளித்த அந்த மனிதருடன் (ஆனந்த் எல்.ராய்) புனித கங்கை கரையில் சுற்றும் போது… வாழ்க்கை ஒரு முழு வட்டம் என்பதை உணர்கிறேன்.”

இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும், ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளையும் பெற்று வண்ணம் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் “குந்தன் is forever”, “Full circle moment”, “Goosebumps bro” என உணர்ச்சிப் பெருக்குடன் பதிலளித்து வருகின்றனர்.

dhanush

‘ராஞ்சனா’வுக்குப் பிறகு ஆனந்த் எல்.ராய் – தனுஷ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ நாளை திரையரங்குகளில் களமிறங்குகிறது. இந்த உருக்கமான காசி பயணமும் தனுஷின் பதிவும் படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு உயர்த்தியுள்ளது!

More News