சினிமா உலகில் ஒரு செய்தி தீயாகப் பரவி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அதுதான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் ஜாம்பவான்களையும் ஒரே படத்தில் இணைக்கும் முயற்சிகள் நடப்பதாகவும், அந்தப் படத்தை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) படத்தின் இயக்குநர் அபீஷன் ஜீவின்த் இயக்க இருப்பதாகவும் வந்த தகவல்கள்!
சமீபத்தில் ஒரு நேர்காணலில், இயக்குநர் அபீஷன் ஜீவின்த்திடம் இந்த பரபரப்பான செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
கேள்வி: “உங்கள் அடுத்த ஸ்க்ரிப்ட்டை நீங்கள் சூர்யா, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு விவரித்ததாக ஒரு பேச்சு அடிபடுகிறதே… இது உண்மையா…?”
அபீஷன் ஜீவின்த்: புன்னகையுடன் “ஹாஹா… அப்படி எதுவும் இல்லைங்க. என்னுடைய அடுத்த படத்திற்கான திரைக்கதையை நான் இன்னும் எழுதும் கட்டத்தில்தான் இருக்கிறேன். எல்லாம் உறுதியானதும், நானே விரைவில் அறிவிப்பேன்.”
இவ்வாறு கூறி அந்த வதந்திகளை அவர் சிரித்துக்கொண்டே மறுத்தார்.
அவருடைய அடுத்த அறிவிப்பிற்காக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய…
நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் இன்று (டிசம்பர்…
உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின்…
தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’…
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.