Download App

களமிறங்கியது ‘கட்டா குஸ்தி 2’: விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லக்ஷ்மி கூட்டணியின் அதிரடி பர்ஸ்ட் லுக் வெளியீடு!

வைகாசி 15, 2026 Published by Natarajan Karuppiah

கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி மல்லுக்கட்டும் இந்த புதிய போஸ்டர் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

முதல் பாகத்தில் “பெண்கள் குஸ்தி சண்டை போடக்கூடாது” என்ற பிற்போக்குத்தனமான எண்ணத்தை நகைச்சுவையாக உடைத்திருந்தார் இயக்குனர் செல்லா அய்யாவு. தற்போது அதன் இரண்டாம் பாகத்திற்கு மிக வலுவான ஒரு வாசகத்தோடு பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது:

“சம்பாரிக்கிறது மட்டும் வேலை இல்ல.. வீட்டை சமாளிக்கிறதும் full-time வேலை தான்..”

இந்த ஒற்றை வரி, இரண்டாம் பாகம் குடும்பத் தலைவிகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் சவால்களையும் மையப்படுத்தி இருக்கப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

முதல் பாகத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு ஷான் ரோல்டன் (Sean Roldan) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது கிராமிய மணம் கலந்த துள்ளலான இசை, இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷாலின் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பு, ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அதிரடி ‘குஸ்தி’ என முதல் பாகத்தில் இருந்த அதே மேஜிக் இதிலும் தொடரும் என நம்பலாம். ஜூலை 3, 2026 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

குடும்பங்கள் கொண்டாடும் ஒரு பக்கா என்டர்டெய்னராக ‘கட்டா குஸ்தி 2’ அமையும் என்பதில் சந்தேகமில்லை. மல்லுக்கட்ட தயாரா மக்களே?

More News