Download App

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ நாளை முதல் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமிங்!

கார்த்திகை 20, 2025 Published by anbuselvid8bbe9c60f

diesel

இந்த தீபாவளிக்கு (அக்டோபர் 17) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம், நாளை (நவம்பர் 21) முதல் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். வினய் ராய், கருணாஸ், விவேக் பிரசன்னா, கேபிஒய் தீனா, டாங்கி பாலாஜி, சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவானதாகக் கூறப்படும் இப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களின் பேராதரவால் நல்ல வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

Diesel1

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் நூறு கோடி வானவில். இப்படம் 2026-ல் திரைக்கு வரவுள்ளது.

இனி வீட்டிலிருந்தபடியே ஹரிஷ் கல்யாணின் அதிரடி ஆக்‌ஷன்-காமெடி “டீசல்” படத்தை அமேசான் ப்ரைமில் ரசிகர்கள் ரசிக்கலாம்!

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.