Download App

விஜய்யின் ‘ஜனநாயகன்’ OTT ரிலீஸ் தாமதமாகும்!

மார்கழி 30, 2025 Published by anbuselvid8bbe9c60f

jananayaganott

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி, அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ வரும் ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் அதே தேதியில் படம் ரிலீஸ் ஆகிறது.

ஹிந்தியில் ‘ஜன்நேதா’ (JanNeta) என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் இப்படத்தை வட இந்தியாவில் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது.

வட இந்திய மல்டிபிளெக்ஸ் செயின் தியேட்டர்களான PVR, Inox, Cinepolis போன்றவற்றில் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய வேண்டுமானால், 8 வாரங்கள் (அதாவது இரண்டு மாதங்கள்) கழித்தே OTT தளங்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கண்டிஷனை அந்த தியேட்டர் சங்கங்கள் விதிக்கின்றன.

இந்த கண்டிஷனை ஏற்றுக்கொண்டு, வட இந்தியாவில் ‘ஜனநாயகன்’ படத்தை அதிக திரைகளில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விஜய்யின் முந்தைய படங்களை விட இப்படத்திற்கு வட இந்திய மல்டிபிளெக்ஸ்களில் அதிக வசூல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, ‘ஜனநாயகன்’ படம் OTT தளங்களில் ரிலீஸ் ஆவதற்கு தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. திரையரங்க ரிலீஸுக்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து, 2026 மார்ச் மாதத்தில்தான் படம் ஓடிடி தளங்களில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த படத்தின் ரிலீஸ், தமிழ் சினிமாவில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Now