Download App

நாய் கடித்தால் அதை பெரிதுபடுத்தி பயத்தை உருவாக்கக் கூடாது – நிவேதா பெத்துராஜ்

கார்த்திகை 24, 2025 Published by Natarajan Karuppiah

சென்னையில் தெருநாய்களின் நலன் மற்றும் அவற்றை கொல்லாமல் கருத்தடை செய்து பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டு பேசினார்.

நாய் கடித்தால் அதை பெரிய விஷயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது; கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது; அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை நாய் கடித்து ரேபிஸ் பரவுவது மிகவும் மோசமானது; அதை வைத்து பயத்தை உருவாக்குவதற்கு பதிலாக அதற்கான தீர்வு என்ன என்பதை கற்பிக்க வேண்டும்.தெருநாய்களை கொல்வது தீர்வு அல்ல; அவற்றுக்கு தடுப்பூசி போடுவதும், கருத்தடை செய்வதும் தான் நிரந்தர தீர்வு” என்று தெரிவித்தார்.

தெருநாய்கள் மீதான வன்முறையை கண்டித்த அவர், அன்பு மற்றும் அறிவியல் ரீதியிலான அணுகுமுறையே இப்பிரச்சினைக்கு தேவை என்று வலியுறுத்தினார். இந்தப் பேரணியில் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிவேதாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Trending Now

No trending articles in this category from the last 3 days.