பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஒரு பக்கம் ‘கூலி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கமாக தற்காப்பு கலையில் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது இந்தப் படத்தின் டப்பிங் உள்பட தொழில்நுட்பப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ‘கூலி’ படம் வெளியானவுடன், அவர் கார்த்தி நடிக்கவிருக்கும் ‘கைதி 2’ படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற விக்ரம், சந்தானம், ரோலக்ஸ் போன்ற கதாபாத்திரங்கள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தின் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருப்பதாகவும், இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காகத்தான் லோகேஷ் கனகராஜ் தற்போது தற்காப்பு கலையில் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய…
நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் இன்று (டிசம்பர்…
உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின்…
தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’…
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.