நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்புசீவி’ திரைப்படம் இன்று (டிசம்பர் 19) திரையரங்குகளில் வெளியாகிறது. சரத்குமார், காளி வெங்கட், தார்னிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ‘கொம்புசீவி’ படத்தைத் தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தையும் அதே ஸ்டார் சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தை ‘திருச்சிற்றம்பலம்’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்திரன்’ போன்ற ஹிட் படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார்.
தற்போது மாதவன் நடிப்பில் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தை இயக்கி வரும் மித்ரன் ஜவஹர், அப்படத்தின் நிதி சிக்கல் காரணமாக இடைவெளியில் சண்முக பாண்டியன் படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கொம்புசீவி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மித்ரன் ஜவஹர் கலந்து கொண்டது இந்தக் கூட்டணி குறித்த பேச்சுகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.