அதிர்ச்சி! கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்திற்கு சென்னை ஹைகோர்ட் முழு தடை – டிசம்பர் 12 ரிலீஸ் ரத்தாகிறது!
December 11, 2025 Published by anbuselvid8bbe9c60f

கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று பெரும் அதிர்ச்சி அளிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2014-ல் திவாலானவர் என அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்ற 10.35 கோடி ரூபாய் கடன், வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாததால், சொத்து ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் & சி. குமரப்பன் அமர்வு, பின்வருமாறு உத்தரவிட்டுள்ளது:
- “கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை திரையரங்குகளிலோ, ஓடிடி தளங்களிலோ, எந்த வடிவிலும் வெளியிட தடை.”
- ஞானவேல்ராஜாவுக்கு ஏற்கனவே பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் கடில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ‘வா வாத்தியார்’ படத்தின் திரைக்கு வெளியீடு தற்போது முழுமையாக ரத்தாகியுள்ளது. படக்குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், இந்த உத்தரவு தமண்ணில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி ரசிகர்களும் திரைத்துறையும் இப்போது அதிர்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், கடன் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டு படம் வெளியாகுமா என காத்திருக்கின்றனர்.




















