Download App

‘மங்காத்தா டா!’ – அஜித்தின் கல்ட் கிளாசிக் ஜனவரி 23 முதல் ரீ-ரிலீஸ்!

தை 5, 2026 Published by anbuselvid8bbe9c60f

mankatha

தமிழ் சினிமாவின் மைல்கல் படங்களில் ஒன்றான ‘மங்காத்தா’ மீண்டும் திரையரங்குகளில்! இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் தனது 50வது படமாக நடித்த இந்த ஆக்ஷன் திரில்லர், 2011-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 23 முதல் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“மங்காத்தா டா! The Kingmaker is back to meet you all ” என்று புதிய டீசரை வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது சன் பிக்சர்ஸ். அஜித் குமாரின் தனித்துவமான நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரமான வினாயக் மகாதேவ், யுவன் ஷங்கர் ராஜாவின் த்ரில்லிங் பின்னணி இசை, விறுவிறுப்பான ஹைஸ்ட் கதைக்களம் – இவை அனைத்தும் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ளவுட் நைன் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், பிரேம்ஜி, லட்சுமி ராய், மகத் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் கிரே ஷேட் வில்லன் ரோல், தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்டை உருவாக்கியது.

ரீ-ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். “விளையாடு மங்காத்தா” தீம் மீண்டும் தியேட்டர்களில் ஒலிக்கப் போகிறது – தல ரசிகர்களுக்கு இது ஒரு திருவிழாவாக அமையும்!

More News

Trending Now