Download App

மீண்டும் வருகிறது ‘மரகத நாணயம்’! – பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கிய இரண்டாம் பாகம்

மாசி 17, 2026 Published by Natarajan Karuppiah

தமிழ் சினிமாவில் ஃபேண்டஸி மற்றும் காமெடி கலந்த திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் உருவாகும் இந்த இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் நடித்த ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த் ராஜ், முனிஷ்காந்த் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் கூடுதல் பலமாக மூத்த நடிகர் சத்யராஜ் மற்றும் முன்னணி நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்:நடிகர் கார்த்தி – முதல் காட்சிக்கான கிளாப் போர்டை அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.இயக்குநர் வெங்கட் பிரபு – கேமராவை இயக்கி ‘ஆக்ஷன்’ சொன்னார்.நடிகர் ஆர்யா – சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அதன் இசையும் பின்னணியும் முக்கிய காரணமாக இருந்தது. அதே மந்திரத்தை மீண்டும் நிகழ்த்த இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார், ஒளிப்பதிவு: பி.வி. சங்கர்,படத்தொகுப்பு: திருமலை ராஜன் ஆர், தயாரிப்பு: ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன.

“இரும்பொறை அரசனின் அந்த மரகத நாணயம் மீண்டும் என்னென்ன அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது? ஆதி மற்றும் அவரது குழுவினர் இந்த முறை யாரிடம் மாட்டிக்கொள்ளப் போகிறார்கள்?” என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

Trending Now

No trending articles in this category from the last 3 days.