தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9, 2026 அன்று உலகளவில் திரைக்கு வர உள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க சன் டிவி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிறகு, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி ஆகிய சேனல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது.
தற்போது, ஜீ தமிழ் சேனல் தான் ‘ஜனநாயகன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சேனல் சார்பில் சுமார் 64 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், பொங்கல் ரிலீஸாக வரும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் OTT உரிமையை ஜீ நிறுவனமே (Zee5) வாங்கியுள்ளது. அதற்காக 52 கோடி ரூபாய் வியாபாரம் நடந்திருப்பதாக தெரிகிறது.
‘ஜனநாயகன்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் ஏற்கனவே பிரமாண்ட அளவில் நடந்து வரும் நிலையில், இந்த சாட்டிலைட் டீல் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விஜய்யின் இறுதி திரைப்படமாக இருப்பதால், படத்தின் வியாபாரம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது!
பாகுபலி, சலார் , கல்கி 2898 ஏடி போன்ற மெகா ஹிட் படங்கள் மூலம் கொண்டாடப்படும், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9, 2026…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து சிறிது இடைவெளி…
காசோலை மோசடி வழக்கில் தனக்கு எதிராக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், சமூக வலைதளங்களில் பரவி வரும் கைது வாரண்ட்…
மலையாள சினிமாவில் சுமார் 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பல வெற்றிப் படங்களை இயக்கியும், எழுதியும் சாதனை படைத்த ஸ்ரீனிவாசன்,
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.