Download App

பிக் பாஸ் தமிழ் 9: “எமோஷனலா காயப்படுத்திட்டு காமெடி’னு சொல்லாத!” – விக்ரமை வெளுத்து வாங்கிய பார்வதி… புரொமோ வெடித்தது!

கார்த்திகை 10, 2025 Published by anbuselvid8bbe9c60f

BB3

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி உச்சக்கட்ட விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறது. 5 வாரங்களை கடந்த இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறங்கினர். இதுவரை 7 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூவும் வெளியேறினர். அரோரா, ரம்யா, கெமி போன்றவர்கள் இருக்கையில் நன்றாக விளையாடிய பிரவீனை வெளியேற்றியது ரசிகர்களிடம் பெரும் விமர்சனத்தை கொண்டு வந்துள்ளது.

இன்று (நவம்பர் 10) வெளியான முதல் புரொமோவில் பிக் பாஸ் டாஸ்க்கில் பார்வதி – சபரி இடையே கடும் மோதல்! சபரி பார்வதியை தள்ளிவிட, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷாக் ஆனார்கள். இரண்டாவது புரொமோவில் பார்வதிக்கு கண்ணில் அடிபட்டது தெரியவந்தது. “இங்க எனக்கு என்ன தோணுதோ அதை சொல்லத்தான் செய்வேன்… யார் கேர் பண்ணாங்க? எல்லோரும் சேர்ந்து டிஸ்குவாலிபைடு’னு தான் சொன்னாங்க!” என சபரியிடம் வாக்குவாதம் செய்தார் பார்வதி. பின்னர் கம்ருதீன், வினோத்திடம், “அவன் அவ்வளவு உயரமா இருக்கான்… மோதும்போது உங்களுக்கு தெரியலையா? உங்க கேர் எங்க போச்சு?” என காட்டமாக பேசினார்.

தற்போது வெளியான மூன்றாவது புரொமோவில் பார்வதியின் கோபம் விக்ரமை நோக்கி திரும்பியுள்ளது! “இந்த வெர்ஷன் ஆஃப் விக்ரம் ரொம்ப புடிச்சிருக்கு… எல்லாத்தையும் எமோஷனலா காயப்படுத்திட்டு ‘காமெடி’னு சொல்லிட்டு இருக்காத!” என விக்ரமிடம் சண்டையிடுகிறார் பார்வதி. அதற்கு பதிலடி கொடுக்கும் விக்ரம், “நான் சீரியஸ்ஸாவே எமோஷனலா காயப்படுத்துவேன் பாரு!” என கூறுகிறார்.

BB4

இந்த புரொமோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பார்வதியின் தொடர் மோதல்கள் ஹவுஸை பதற்றமாக்கியுள்ளன. அடுத்து என்ன நடக்கும்? பிக் பாஸ் யாருக்கு தண்டனை கொடுப்பார்? என ஆர்வம் தாறுமாறாக உள்ளது!

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.