Download App

ரஜினி – கமல் ஒன்றிணைக்கும் “பராசக்தி” இசை வெளியீட்டு விழா! சிவகார்த்திகேயன் படத்திற்காக திரண்டு வரும் சூப்பர் ஸ்டார்களா?

December 4, 2025 Published by anbuselvid8bbe9c60f

sk

சிவகார்த்திகேயன் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பான்-இந்திய திரைப்படம் “பராசக்தி”. ஜனவரி 14, 2026 அன்று பொங்கல் ரிலீஸாக வரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி மாதமே நடைபெறும் என உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாடல் விரைவில் வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயம் ரவி வில்லனாகவும், அதர்வா, பேசில் ஜோசப், ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

sk1

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் சினிமாவின் இரு மாபெரும் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயனுடனான நெருக்கம் காரணமாக இருவரும் இவ்விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ரஜினி – கமல் ஒரே மேடையில் தோன்றினால் அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

“பராசக்தி” இசை வெளியீட்டு விழா தமிழகத்தின் மிகப்பெரிய மாஸ் நிகழ்வாக மாறப்போகிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறது தமிழ் சினிமா உலகம்.

sk2