Download App

சூர்யாவின் ‘கருப்பு’ டீசர் எப்போது? மறைமுகமாக கூறிய ஆர்ஜே பாலாஜி..!

ஆனி 21, 2025 Published by Natarajan Karuppiah

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் ‘கருப்பு’ என நேற்று ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்த நாளின்போது வெளியானது. இது குறித்த போஸ்டரும் அட்டகாசமாக இருந்ததாக சூர்யாவின் ரசிகர்கள் கருத்தை தெரிவித்தனர் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், இன்று ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, ‘கருப்பு’ படத்தின் ஒரு மிகப்பெரிய விருந்து அடுத்த மாதம் வெளிவர உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் வருவதை அடுத்து, அன்றைய தினம் இந்த படத்தின் டீசர் வெளியாவதை தான் ஆர்.ஜே. பாலாஜி இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எனவே, ‘கருப்பு’ படத்தின் டீசரை சூர்யாவின் பிறந்தநாளில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டீசர் வெளியீட்டுக்கு பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா நடிக்கும் இந்த படத்தில், சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சாய் அபிநயங்கர் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.