ஆழியில் சரத்குமார்… அசத்தும் தாய் கிழவி ராதிகா: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
மாசி 26, 2026 Published by Natarajan Karuppiah

சினிமா வரலாற்றில் கணவன், மனைவி இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாவது மிகவும் அபூர்வமான ஒன்று. அந்த வகையில், சரத்குமார் நடித்துள்ள ‘ஆழி’ மற்றும் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை திரைக்கு வருகின்றன.
ஆழி (Aazhi) – சரத்குமாரின் ஆக்ஷன் த்ரில்லர்
மாதவ் ராமதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் சரத்குமார் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘மேல்விலாசம்’ போன்ற தரமான படங்களை கொடுத்த இயக்குநருடன் சரத்குமார் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே கவனத்தைப் பெற்றுள்ளன.
தாய் கிழவி (Thaai Kizhavi) – ராதிகாவின் மிரட்டலான நடிப்பு
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான படம் ‘தாய் கிழவி’.
இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா நடித்துள்ளார். “இது ரஜினிகாந்த் சார் நடிக்க வேண்டிய கதை, அவர் நடிக்காததால் நான் நடித்தேன்” என்று ராதிகா ஒரு பேட்டியில் குறிப்பிட்டது இப்படத்திற்கு மிகப்பெரிய ‘ஹைப்’ கொடுத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ‘தாய் கிழவி’ பட விழாவில் பேசிய சரத்குமார், “நாளை எனது ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் ஒன்றாக வெளியாகிறது. இதில் போட்டி ஏதுமில்லை, என் மனைவி வெற்றி பெற்றால் அது நான் பெற்ற வெற்றியாகவே கருதுகிறேன்” என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.
வெவ்வேறு ஜானர்களில் உருவாகியுள்ள இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் ‘சுப்ரீம் ஸ்டார்’ ஆக்ஷனா அல்லது ‘சின்னத்திரை ராணி’யின் நடிப்பார்வமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.















