சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ OTT ரெக்கார்ட்!
மார்கழி 17, 2025 Published by anbuselvid8bbe9c60f

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது.
இப்படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகாமல் இருந்த நிலையில், படத்தின் கதைக்களம் இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தை மையப்படுத்தியது என்பதால் சில ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஜீ5 நிறுவனம் தைரியமாக முன்னேறி ரூ.52 கோடிக்கு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கியுள்ளது. இது சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக விலைக்கு விற்பனையான ஓடிடி உரிமை என்று கூறப்படுகிறது.
படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது. அனைத்து உரிமைகளும் விற்பனையானதால், ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘பராசக்தி’யை பிரம்மாண்ட விளம்பரங்களுடன் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா (தமிழ் அறிமுகம்), பாசில் ஜோசப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்.
1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களை பின்னணியாகக் கொண்ட இந்த அரசியல் வரலாற்று டிராமா மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது!















