பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’, ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார். ‘கில்லர்’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார்.
ஏஞ்சல் ஸ்டூடியோஸ் மற்றும் கோகுலம் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் எஸ்.ஜே.சூர்யாவின் கனவுத் திரைப்படமாக உருவாகி வருகிறது. கதையில் காருக்கு முக்கிய பங்கு இருப்பதால், ஜெர்மனியில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் சிறப்பாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான்-இந்திய படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் நடந்த சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. கயிறு கட்டி சண்டைக் காட்சியில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, கீழே இறங்கும் போது கம்பிகள் காலில் குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு காலில் 2 தையல்கள் போடப்பட்டன.
மருத்துவர்கள் 15 நாட்கள் முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால், தற்போது எஸ்.ஜே.சூர்யா ஓய்வில் உள்ளார். இதனால் படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரது விரைவான குணமடைதலை வாழ்த்தி வருகின்றனர்.
‘கில்லர்’ படத்தின் மூலம் இயக்குநராக திரும்பும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், இந்த விபத்து படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா வரலாற்றில் கணவன், மனைவி இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாவது மிகவும் அபூர்வமான ஒன்று.
செல்வராகவன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் இருவரும் ஏற்கனவே 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' போன்ற கிளாசிக் ஹிட்களைக் கொடுத்தவர்கள்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து…
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு உலகப் புகழ்பெற்ற…
நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ஏகே 64’ (AK64) திரைப்படம் குறித்த மாபெரும் அப்டேட்டை…
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’.