45 வயது ஆணும் 20 வயது பெண்ணும் – சூர்யா 46 கதை விவரங்கள் வைரல்!
மார்கழி 29, 2025 Published by anbuselvid8bbe9c60f

நடிகர் சூர்யாவின் 46வது படமான இந்தத் திரைப்படம், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வருகிறது. ‘பிரேமலு’ படத்தில் கவனம் ஈர்த்த மமிதா பைஜூ சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க, பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்திய பேட்டியில் படத்தின் கதை குறித்து திறந்து பேசியுள்ளார். இப்படம் 45 வயது ஆணுக்கும் 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவு, நட்பு, உணர்வுகள் மற்றும் காதலை மையப்படுத்தியது என்று கூறியுள்ளார். சுமார் 25 வருட வயது வித்தியாசம் இருந்த போதிலும், அவர்களுக்கு இடையே காதல் வருமா என்பதே கதையின் மையம். இது சூர்யாவின் வெற்றிப்படமான ‘கஜினி’யின் ஃப்ளாஷ்பேக் பகுதியை ஒத்திருக்கும் என்றும் அவர் ஒப்பிட்டுள்ளார்.
இந்த விவரங்கள் வெளியானதில் இருந்து இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன. வயது வித்தியாசம் கொண்ட காதல் கதைகள் திரைப்படங்களில் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் விவாதமும் எழுந்துள்ளது.

இதற்கு முன்பு ‘கருப்பு’ (சூர்யா 45) படத்தை முடித்த சூர்யா, இப்போது சூர்யா 47 படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (‘ஆவேசம்’ பட இயக்குநர்) இயக்குகிறார். நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட்-புரொடக்ஷனில் உள்ளது. 2026 கோடைகாலத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















