Download App

ஆஸ்கர் வென்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யா பட நாயகி.. ஆக்சன் த்ரில்லர் படமா?

வைகாசி 31, 2025 Published by Natarajan Karuppiah

தென்னிந்திய திரையுலகில் நடிகர் சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தின் மூலம் தமிழில் முதல் முறையாக நாயகியாக அறிமுகமானவர் திஷா பதானி. இந்த படத்துக்குப் பிறகு, ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் திஷா பதானி நடித்து வருகிறார்.

ஏற்கனவே ஹாலிவுட் திரைப்படமான ‘குங்பூ’ ’யோகா’ ஆகிய படங்களில் ஜாக்கி சானுடன் இணைந்து நடித்துள்ள திஷா பதானி, தற்போது மீண்டும் ஒரு  ஹாலிவுட்  படத்தில் நடிக்க  உள்ளார்.

‘ஹாலிகார்ட்ஸ்’ என்னும் ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் வகையிலான புதிய திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் ஸ்பேசி இயக்கியிருக்கிறார். திஷாவுடன் இணைந்து டால்ப் லன்ட்க்ரன், டைரெஸ் கிப்சன் மற்றும் பிரியானா ஹில்டெப்ரண்ட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் மெக்சிகோவில் உள்ள டுரோங்கா பகுதியில் படத்தின் முன்னோட்ட வீடியோ ஒளிபரப்பானது. இதில் வெளியாகிய காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.