Download App

நான் லைக் செய்யவே இல்லை.. தீபிகா படுகோன் சர்ச்சை குறித்து தமன்னா விளக்கம்..!

வைகாசி 30, 2025 Published by Natarajan Karuppiah

நான் லைக் செய்யவே இல்லை, ஆனால்  தானாகவே லைக் விழுந்துவிட்டதாகவும், இது பெரும் சர்ச்சைக்கு உள்ளானதால் இது குறித்து நான் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை இன்ஸ்டாகிராம் சரி செய்ய வேண்டும் என்றும் நடிகை தமன்னா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ என்ற திரைப்படத்தில் தீபிகா படுகோன் நடிக்க இருந்த நிலையில், திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். படத்திலிருந்து விலகிய பின், அவர் படத்தின் கதையை வெளியிட்டதாக இயக்குனர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பான ரீல்ஸ் ஒன்றும் இணையத்தில் வெளியானது.

அந்த ரீல்ஸை நடிகை தமன்னா லைக் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நடிகை தமன்னா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு தீபிகா படுகோன் பேசிய ஒரு வீடியோவுக்கு தான் லைக் செய்ததாகவும், ஆனால் இப்போது உள்ள வீடியோவை லைக் செய்தது போல் இன்ஸ்டாகிராம் காட்டுகிறது என்றும், இது இன்ஸ்டாகிராமின் தொழில்நுட்ப கோளாறு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

“தானாகவே எப்படி லைக் விழுகிறது என்பதை இன்ஸ்டாகிராம் தயவுசெய்து கண்டுபிடிக்க வேண்டும்,” என்றும், “ஏனென்றால் அதை சிலர் செய்தியாக்கி, நான் அதற்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் கூட ஒரு கவர்ச்சி நடிகை புகைப்படத்திற்கு  விராட் கோலி லைக் செய்ததாக கூறப்பட்ட நிலையில், அதை அவர் “இது இன்ஸ்டாகிராமின் தொழில்நுட்ப கோளாறு” என மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.